Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  561-உறவுப்பூக்கள் என்னில் மலர  

உறவுப்பூக்கள் என்னில் மலர
உகந்த பலியாய் என்னையே ஏற்பாய்
இயேசுவின் பலியே என்வாழ்வின் வழியே
என்னையே தருவேன் காணிக்கையாக
அர்ப்பணித்தேன் என்னை அர்ப்பணித்தேன்
அன்பின் பலியாய் அர்ப்பணித்தேன்

அப்பமும் இரசமும் கொண்டு வந்தேன் - இது
அன்பின் பலியென கண்டு கொண்டேன்
தந்து வாழும் தியாகப் பலியாய்
எந்தன் வாழ்வு உம்மில் மலர
என்னையே தருவேன் காணிக்கையாக
அர்ப்பணித்தேன் என்னை அர்ப்பணித்தேன்
அன்பின் பலியாய் அர்ப்பணித்தேன்

உடலும் உயிரும் உமது பரிசு - உம்
பலியில் இணைந்தால் புதிய படைப்பு
துயரம் துடைக்கும் தூய பணியில்
பலியின் பயனாய் என்வாழ்வு மலர
என்னையே தருவேன் காணிக்கையாக
அர்ப்பணித்தேன் என்னை அர்ப்பணித்தேன்
அன்பின் பலியாய் அர்ப்பணித்தேன்


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்