Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  560-உள்ளதைத் தந்தேன்  


உள்ளதைத் தந்தேன் இறைவா
உண்மையை உரைத்தேன் தலைவா
உள்ளத்தைத் தந்தேன் தேவா
உயர் பலியாக்கவாய் நாதா

ஆலயம் திறந்தது பலி செய்ய நுழைந்தேன்
அதிலொரு பெருந்துடிப்பு
கலசம் ஒலிர்ந்தது கனிமொழி ஒலித்தது
அது ஒரு நல விதைப்பு
தூபத்தை ஏற்றேன் தவறினை களைந்தேன்
அதிலொரு பலன் அளிப்பு
உள்ளத்தை அளித்தேன் இடரையும் இணைத்தேன்
அது ஒரு உளப் பிணைப்பு

படைத்த உன் பொருளை உனக்கே படைத்தேன்
அதலொரு புது மகிழ்ச்சி
அளிக்குமென் பொருளை பலியாய் மாற்றுவாய்
அது ஒரு விண் திகழ்ச்சி
மகனின் பலியாய் மானிடன் பொருளாம்
அதிலொரு தனிச்சிறப்பு
இறைவன் நிகழ்ச்சியில்; மானிடன் ஒரு பங்காம்
அது ஓரு புது பிறப்பு

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்