காணிக்கைப்பாடல் | 558-உள்ளம் மகிழ்கின்றோம் |
உள்ளம் மகிழ்கின்றோம் உவந்து தருகின்றோம் எங்கள் காணிக்கை ஏற்க விழைகின்றோம் (2) இறைவனே உம்மையே பணிகின்றோம் புகழ்கின்றோம் (2) இனிதாகிடும் அருள்யாவுமே வரமாகிட வேண்டுகின்றோம் உம்மையன்றி எமக்கு என்றும் மீட்பு இல்லையே - 2 உறவுகொண்டு உம்மில் வாழ வழியுமில்லையே (2) இறைவனே உமக்கென்றே படைப்பெல்லாம் படைக்கின்றோம் - 2 வாழ்வுமாக வளமுமாக பலியுமாக வேண்டுகின்றோம் அன்பு என்னும் உலகம் இன்னும் ஆகவில்லையே - 2 அன்பு முழுதும் அணிந்த உள்ளம் காண்பதில்லையே (2) அன்பெல்லாம் நீரென்றே நம்பினோம் வாழ்கின்றோம் - 2 ஆளும் தேவன் தாளில் வைத்து பலியை ஏற்க வேண்டுகின்றோம் |