காணிக்கைப்பாடல் | 556-உழைப்பின் கனிகளையே |
உழைப்பின் கனிகளையே உமக்கே படைக்கின்றோம் உன்னத இறைவனே - உம் பாதமலர் பணிகின்றோம் எங்களின் வியர்வையின் விலைதனையும் எங்களின் சிலுவையின் உயர்வினையும் பாஸ்கா ஒளியினில் பொருள் பெறவே இறைவா படைக்கின்றோம் - உம் குருதியில் கலக்கின்றோம் மனுக்குலத்தின் எல்லாத் தொழில்களுமே மாண்புறச் செய்பவர் நீரன்றோ மனமகிழ்வுடன் எம் உழைப்பனைத்தும் இறைவா படைக்கின்றோம் - உம் குருதியில் கலக்கின்றோம் |