Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  555-உழைக்கும் கரங்கள்  


உழைக்கும் கரங்கள் படைக்கும் வரங்கள்
அப்பமாய் கொண்டு வந்தோம்
சிந்திடும் கண்ணீர் சிதறிடும் செந்நீர்
கிண்ணத்தில் தருகின்றோம் (2)
ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர்
மாற்றிடுவீர் எம்மை மாற்றிடுவீர்
ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர்
வாழ்வின் உணவாய் மாற்றிடுவீர்

கோதுமை மணிகள் நொறுங்கும் மனங்கள்
மகிழவேண்டுமே
பகிர்ந்து வாழும் புதிய உலகம்
படைக்கவேண்டுமே (2)
ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர்....

அடிமைத் தனங்கள் அடக்குமுறைகள்
அழிய வேண்டுமே
தேவனின் ஆட்சி மனித மாட்சி
வளர வேண்டுமே (2)
ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர்....

சாதி சமய வெறிகள் எம்மில்
மறைய வேண்டுமே
ஆண் பெண் சமமே என்ற நிலைமை
மலர வேண்டுமே (2)
ஏற்றிடுவீர் தந்தாய் ஏற்றிடுவீர்....


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்