காணிக்கைப்பாடல் | 554-உலகினைப் படைத்த |
உலகினைப் படைத்த ஆண்டவரே உம்மிடம் சரணடைந்தேன் என்மனம் தருகின்ற காணிக்கையை ஏற்றிடவேண்டுகிறேன் -2 கருணையின் இறைவா ஏற்பாயே காலமெல்லாம் நலம் சேர்ப்பாயே 2 விலைமதிப்பில்லா கலப்படம் இல்லா நறுமணத் தைலம் முழுமையாய் தந்தேன் -2 உள்ளத்தின் எண்ணம் அறிந்திடும் இறைவா ஏழையின் அன்பை ஏற்றிடுவாய் 2 உன் எழில் பாதம் சரணடைந்தேன் என்பிழை யாவும் பொறுத்தருளச் செய்வாய் கோதுமை அப்பமும் திராட்சை இரசமும் உம்மனம் விரும்பும் காணிக்கையன்றோ -2 கலைகளும் கல்வியும் திறமையும் யாவும் அடுத்தவர் நலம்பெற கையளித்தேன் -2 ஆவியை என்னில் பொழிந்திடுவாய் யாவும் நலமுடன் வாழ்ந்திடச் செய்வாய் |