Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  553-உண்மைப் பலியை  



உண்மைப் பலியை உணர்ந்து தருகின்றோம்
உலகம் வாழ எம்மைத் தருகின்றோம்
எம்மைத் தருகின்றோம்

குடிசையில் எரியும் விளக்கினை அணைத்து உன்
கோபுரத் தீபம் ஏற்றி வைத்தோம்
ஏழையின் பசியினை மறந்து உனக்கு
காய்களும் கனிகளும் படைத்து நின்றோம்

ஸா,தஸநி,நீ பநிதா கபகா பதபா தநிதா
ஸஸாநிதப நீநீத பத பநிதா
மனநிலை மாறி புதுப்பலி தந்தோம்
மனிதனுக்காக எம்மையே தந்தோம்
மனிதம் வாழ எம்மைத் தந்தோம் ஏற்பாயே

பாலுக்கும் கூழுக்கும் பஞ்சமென்றாலும் உன்
பல்லாக்கு தூக்க ஓடி வந்தோம்
பாமரன் கண்ணீர் துடைக்க மறந்து
உனக்கு ஆறுதல் சொல்ல வந்தோம்

ஸா,தஸநி,நீ பநிதா கபகா பதபா தநிதா
ஸஸாநி தப நீநீத பத பநிதா
மனிதனின் கவலை தீர்த்திட வந்தோம்
மனமகிழ்வோடு எம்மையே தந்தோம்
மனிதம் வாழ எம்மைத் தந்தோம் ஏற்பாயே


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்