காணிக்கைப்பாடல் | 552-உடல் பொருள் ஆவியெல்லாம் |
உடல் பொருள் ஆவியெல்லாம் உன் பாதம் படைத்தேன் நான் பார்க்கும் உலகெல்லாம் உன் சொல்லின் விரிவுரையே அதில் வாழும் உயிர்களெல்லாம் உன் அன்பின் தொடர்கதையே அதைத் தந்தேன் பலிப்பொருளாய் ஏற்பாய் எனைத் தந்தேன் ஒரு பொருளாய்ச் சேர்ப்பாய் - 2 திரு அப்பம் போல அதைப் பகிர்ந்து அனைவர்க்கும் வாழ்வருள்வாய் - 2 நிறை வாழ்வு உமதாகும் நான் கண்டேன் பலி வாழ்வில் பொருள் வடிவில் பலி தந்தேன் உன் வாழ்வைத் தரவருவாய் புதுவுருவென எனை மாற்றிடுவாய் புதுவுலகிதுவென நான் வாழ்வேன் - 2 திருமகன் சாயலில் வளரவிடும் நிறையருள் நான் பெறுவேன் - 2 |