காணிக்கைப்பாடல் | 551-உகந்த காணிக்கையாய் |
உகந்த காணிக்கையாய் ஒப்புக்கொடுத்தேனையா சுகந்த வாசனையாய் முகர்ந்து மகிழுமையா தகப்பனே உம் பீடத்தில் தகனப் பலியாகினேன் அக்கினி இறக்கி விடும் முற்றிலும் எரித்து விடும் வேண்டாத பலவீனங்கள் ஆண்டவா முன் வைக்கின்றேன் மீண்டும் தலை காட்டாமல் மாண்டு மடியட்டுமே கண்கள் தூய்மை ஆக்கும் கர்த்தர் உமைப்பார்க்கணும் - என் காதுகள் திறந்தருளும் கர்த்தர் உம் குரல் கேட்கணும் |