காணிக்கைப்பாடல் | 550-இன்னிசை இசைத்து |
இன்னிசை இசைத்து வந்தேன் - அதில் இனியவை இணைத்து வந்தேன் இனியவனே ஏற்றிடுவாய் உயர்ந்ததை அளித்திடத் தேடி நின்றேன் உன்னிடம் என்னையே தர வந்தேன் உள்ளத்தைக் காத்திட வேண்டி நின்றேன் உன்னுடன் இணைந்திட விழைகின்றேன் இன்னிசை நாதமும் படைப்பினிலே இனிய உன் நாமம் பாடிடுதே படைத்திட நானும் இசைத்து நின்றேன் பாடிடும் குரலினை ஏற்றிடுவாய் |