காணிக்கைப்பாடல் | 549-இன்னருள் தந்திடுவாய் |
இன்னருள் தந்திடுவாய் - என்னில் இரங்கி என் பலி ஏற்பாய் - இறைவா இன்னருள் தந்திடுவாய் மண்ணும் புகழாம் உமக்கு பொன்னில்லை நான் தருவதற்கு - 2 உன்னை நினைத்து மனதை எடுத்தேன் உன்னருள் பணிந்து காணிக்கை வைத்தேன் வாழ்நாள் இனி மேலாக வளர் நலங்கள் நீர் பொழிந்தாக - 2 தூய்மை கமழும் மலர் நானாக துணையாகத் திருவாய் நீர் அமைந்தாக உலகுக்கு நான் வாழாது உன்னதர்க்கே உயிர் வாழ்ந்து - 2 உயிர்த்தெழும் உணர்வில் உலகில் இறந்து உன்னுடன் வாழ மனமகிழ்ந்து |