காணிக்கைப்பாடல் | 547-இறைவனின் பாதம் |
இறைவனின் பாதம் பலிதரும் நேரம் இணைவோம் நாமும் காணிக்கை சுமைகளின் பாரம் சுமந்திடும் பாவம் களைந்திட விளைவோம் காணிக்கை காணிக்கை இதய காணிக்கை காணிக்கை எளிய காணிக்கை பகையுள்ள நெஞ்சம் பகிர்ந்திடும் காணிக்கை இறைவன் ஏற்பதில்லை எளியவர் உள்ளம் தரும் நல்காணிக்கை இறைவன் மறுப்பதில்லை இதை உணர்ந்தே உள்ளம் இணைந்தே தருகின்ற காணிக்கை ஏற்றருள்வாய் காத்தருள்வாய் காலமும் துணை நிற்பாய் பட்டம் பதவி பொன்னோ பொருளோ இறைவன் ஏற்பதில்லை உள்ளதை உவந்தே அளித்திடும் காணிக்கை இறைவன் மறுப்பதில்லை அன்பின் இறைவா எம் தலைவா இருப்பதை உமக்களித்தோம் அர்ப்பணமாய் ஏந்திவந்தோம் எம்மையே ஏற்றிடுவாய் |