காணிக்கைப்பாடல் | 543-இறைவா உந்தன் பாதம் |
இறைவா உந்தன் பாதம் வருகின்றேன் என்னையே உனக்காகத் தருகின்றேன் (2) மலர்களில் விழுந்து மணம் என நுழைந்து காற்றினில் கலந்து கனிவோடு பணிந்து பசி உள்ளோர்க்கு உணவாக நானிருப்பேன் உடையில்லாத எளியோர்க்கு உடையளிப்பேன் (2) விழுந்தவரை தூக்கிடுவேன் - இங்கு நலிந்தவரின் துணையிருப்பேன் இதுவே நான் தரும் காணிக்கையே இருப்பவர் கொடுப்பதில் இன்பம் என்ன - கையில் இருப்பதைக் கொடுப்பதில் இன்பம் என்றாய் (2) பலியை அல்ல இரக்கத்தையே - என்னில் விரும்புகின்ற இறைமகனே உனைப் போல் நானும் உருவாகிட |