காணிக்கைப்பாடல் | 541-இறைவா என்னை |
இறைவா என்னை ஏற்றருளே - இந்த சிறு பொழுதேனும் ஏற்றருளே உன்னையன்றிக் கடந்துவிட்ட அநாதையான அந்நாட்கள் என்றென்றும் எந்நாளிலுமே மறந்துபட்டே அவை ஒழியட்டும் இந்தச் சிறிய பொழுதை மட்டும் உன் ஒளியின் கீழ் நிலை நிறுத்தி உன் மடிமீது கிடத்தி அன்பாய் விரித்தருள்வாய் என் ஆண்டவனே |