காணிக்கைப்பாடல் | 538-இருப்பதெல்லாம் கொடுத்து |
இருப்பதெல்லாம் கொடுத்து விட்டேன் என்னிடம் எதுவுமில்லை எனை முழுதும் அர்ப்பணித்தேன் இழப்பதில் கவலையில்லை அழைப்பவர் அவர் பின்னே என் சிலுவையைச் சுமந்திடுவேன் கல்வாரி மேடையிலே பலிப் பொருளாய் மாறிடுவேன் தலைவனின் நிலைமையை இழந்து இங்கே கடைநிலை அடிமையாய் வாழ்ந்து வந்தார் பாதங்கள் கழுவும் நிகழ்வினிலே தலைவனின் கடமையை எடுத்துச் சொன்னார் வாழ்நாள் முழுவதும் பணிகள் செய்தே மெருகாய்த் தன்னையே உருக்கி நின்றார்(2) நண்பனுக்காகத் தன்னுயிரை தருவதே மேலான அன்பு என்றார் தன்னல வழிகளை மறந்து இன்று அடிமையாய் வாழ்ந்திட முடிவு செய்தேன் பிறர் நலமொன்றே கருத்தில் கொண்டு பணிகளைப் புரிந்திட மனமுவந்தேன் வாழ்நாள் முழுவதும் உன் சிலுவை கலங்கரை தீபமாய்த் தெரிகிறது உலகம் வாழ என்னுயிரைத் தருவதே மேலான அன்பு என்பேன் |