காணிக்கைப்பாடல் | 537-இருகரம் குவித்து |
இருகரம் குவித்து இறைவா தொழுதோம் இதயத்தைப் பதத்தில் பலியாய் அளித்தோம் நிலத்தில் விளைந்த மணிகள் குவித்து கொடியில் குலுங்கும் கனிகள் உதிர்ந்து (2) படைப்பின் வழியாய் பரம் புகழ் இசைத்து - 2 பகலவன் ஒளியில் பலியாய் உயரும் பசித்தவர் மனதில் உதித்திடும் கனவும் புசித்தவர் உள்ளத்தில் எழுந்திடும் மகிழ்வும் (2) பணிவுடன் உழைப்போர் உதிர்க்கும் துளியும் - 2 பிணியினில் மடிவோர் துயரமும் படைத்தோம் |