காணிக்கைப்பாடல் | 534-இதோ வருகின்றேன் |
இதோ வருகின்றேன் இதோ வருகின்றேன் இறை வார்த்தை வாழ்ந்திடவே இறையாட்சி வளர்ந்திடவே - இதோ நீ என்னைத் தேர்ந்தாய் நற்செய்தி சொல்ல நிழல் போல என்னோடு தொடர்வாய் பயமில்லை (2) உன் வாழ்வின் இலட்சியப் பயணத்தின் பாதையில் - 2 என் பாதம் முன்வைத்துப் பணி செய்ய வருகின்றேன் ஊரெங்கும் விடுதலை கீதங்கள் முழங்க உண்மை அன்பு நீதியில் நான் என்றும் நிலைக்க (2) திரியாக எரிந்து தியாகங்கள் செய்து - 2 என் பாதம் முன்வைத்துப் பணி செய்ய வருகின்றேன் |