Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  531-இதுவே நேரம்  


இதுவே நேரம் இதுவே காலம்
ஏற்றிடுவீர் எம் காணிக்கையை
இறைஞ்சியே குருவின் கரங்களில் தந்தோம்
ஏக பிதாவே ஏற்றிடுவீர் (2)

உருவினில் அப்பமாய் இருந்தாலும் - இதை
இறைமகன் உடலாய் மாற்றிடுவீர்
நறுங்கனி இரசமாய் இருந்தாலும் - உந்தன்
திருமகன் இரத்தமாய் மாற்றிடுவீர்
பலியிதனோடு பரம்பொருளே - என்
உளம் நிறையாவும் உரிமை தந்தோம் (2)

அனைத்தையும் படைத்த ஆண்டவரே - நின்
அருள் நிறை கருணையை வேண்டுகிறோம்
நினைவையும் சொல்லையும் செயலையும் உமக்கே
நேர்த்தியாய் தந்தோம் ஏற்றிடுவீர்
நலிந்தவை யாவும் நலம்பெற மாற்ற
களிப்புடன் உமக்கே காணிக்கையாக்க (2)

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்