Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  528-இதயம் நடத்தும் வேள்வியிது  
இதயம் நடத்தும் வேள்வியிது
இறைவனே கலந்திடுவாய்
இறையவனே என் இனியவனே
இசைந்து ஏற்றிடுவாய் - இறைவா
இசைந்து ஏற்றிடுவாய்

வானும் கடலும் சேர்வது போல்
உன்னில் இணைய நினைக்கின்றேன்
ஏங்கும் இதய வேட்கையினை
தீர்த்திட அழைக்கின்றேன் - இறைவா
தீர்த்திட அழைக்கின்றேன்

விண்ணக மண்ணகப் பாலமிதோ
எண்ணில்லா உறவுகள் மலர்கின்றதே
விரிந்திடும் உறவின் இதழ்களையே
திருவடி படைக்கின்றேன் - இறைவா
திருவடி படைக்கின்றேன்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்