Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  527-இதயம் தரவந்தேன்  


இதயம் தரவந்தேன் அன்பை நீ தந்தாய் - 2
மனிதம் வாழவே மண்ணில் நீ வந்தாய் - 2
என் வாழ்வின் விடியலே
வசந்தமே எனைத் தந்தேன்

அப்பமும் இரசமும் நான் தந்தேன்
அருளின் உருவாய் நீ வந்தாய் (2)
மண்ணின் கனிகள் நான் தந்தேன்
விண்ணின் கனியாய் நீ வந்தாய்
என் வாழ்வின் விடியலே
வசந்தமே எனைத் தந்தேன்

உழைப்பின் பயனை நான் தந்தேன்
வலிமை எனக்கு நீ தந்தாய் (2)
எளியோர் வாழ எனைத் தந்தேன்
என்னில் தியாகம் நீ தந்தாய்
என் வாழ்வின் விடியலே
வசந்தமே எனைத் தந்தேன்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்