Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  524-ஆனந்த ராகம் பாடியே  


ஆனந்த ராகம் பாடியே வந்தோம்
ஆண்டவன் பீடத்திலே
கானங்கள் முழங்க காணிக்கை தந்தோம்
தேவனின் பாதத்திலே
இறைவா எம்மை ஏற்பாய்
அருளாய் உம்மைத் தருவாய் - 2

மலர்கள் மலர்ந்திட மணமும் வீசிட
இதயம் நிறையுதே
கதிர்கள் வளர்ந்திட கனிகள் விளைந்திட
உதயம் பெருகுதே
நன்றி எம் இறைவா - உம்
அருள் வரங்களுக்காய் - 2
வாழ்வும் உமதே வளமும் உமதே
உம்பாதம் பணிகின்றோம்

உயர்வும் தாழ்வும் உழைப்பும் களைப்பும்
மனித வாழ்வன்றோ
அன்பு பாசம் பகைமை வெறுப்பும்
தினமும் நிகழ்வன்றோ
ஏற்பீர் எம் இறைவா - எம்
வாழ்வு முழுவதுமே
ஏற்பீர் எம் இறைவா வாழ்வு முழுவதுமே
வாழ்வும் உமதே வளமும் உமதே
உம்பாதம் பணிகின்றோம்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்