காணிக்கைப்பாடல் | 523-ஆனந்த மலர்கள் |
ஆனந்த மலர்கள் அழகாகச் சேர்த்து அகம் நிறை மகிழ்வை அகலாக ஏற்றி அருள் வாழ்வின் தேடலை தூபமாய் மாற்றி அன்பாகத் தந்தோம் எம் நேசத் தந்தாய் அர்ப்பணத்தின் அஞ்சலி அன்புடனே எம் பலி - 2 நட்பு என்னும் பூச்சூடி நெஞ்சங்கள் ஒன்றித்து அப்பத்தின் வடிவத்தில் அன்புடன் எமைத் தந்தோம் (2) உம் பாசப்பலியில் பகையெல்லாம் மறைய வெளிவேடம் கலைந்து நிஜவாழ்வு மலர மலர்ப்பாதம் படைத்தோம் அடையாள வடிவில் அர்ப்பணத்தின் அஞ்சலி அன்புடனே எம் பலி - 2 தியாகமதை மனம் தேக்கி நேசத்தில் நிதம் நிலைத்து திராட்சையின் வடிவத்தில் நிறைவுடன் எமைத் தந்தோம் (2) இனிவாழும் வாழ்வின் பொழுதெல்லாம் உமதாய் இதயத்தின் சுவாசம் இறையாட்சிப் பணிக்காய் அருள்வேண்டி வந்தோம் வாழ்வாகும் பலியில் அர்ப்பணத்தின் அஞ்சலி அன்புடனே எம் பலி - 2 |