Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  522-ஆயிரம் தீபங்கள் ஏந்தி  


ஆயிரம் தீபங்கள் ஏந்தி
ஆனந்த இராகங்கள் பூட்டி
அர்ப்பணப் பூவாக வந்தேன்
அன்பே நீ என் வாழ்வை ஏற்பாய்

கவலையும் கண்ணீரும் என்வாழ்வில் தேங்கும் -உன்
கருணையும் இரக்கமும் என் சோர்வைத் தாங்கும்
தியாகங்கள் செய்யவும் தீபங்கள் ஏற்றவும்
தலைவனே உன்னிடம் யாம் வேண்டுகிறோம்
வரமாக உன்னைக் கேட்பதெல்லாம்
உடைந்த உள்ளத்தை உருமாற்றவே

வரங்களைப் பொழிந்திடும் நாயகனே உன்னில் - எம்
கரங்களைக் குவித்துயாம் வேண்டி நின்றோம்
தரும்பலிப் பொருட்களைத் தயவுடன் ஏற்றிட
திருவே உன் திருப்பாதம் பலியாக வந்தேன்
வரமாக உன்னைக் கேட்பதெல்லாம்
உடைந்த உள்ளத்தை உருமாற்றவே



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்