Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  521-ஆமேன் ஆமேன் ஆமேன்  


ஆமேன் ஆமேன் ஆமேன்

தூய எம் தந்தாய் வாராய்
சேயர் எம் பலியைப் பாராய் - 2
மலர்ந்த மலரும் தந்தோம்
மகிழ்ந்து மனமாய் வந்தோம் - 2

வெண்மை அப்பம் தந்தோம்
வியர்வை பலனை தந்தோம் - 2
புன்மை பலவும் நீங்க
புண்ணிய நலங்களைக் கேட்டோம் - 2

ஒரு துளி தண்ணீர் ஏற்பாய்
எம்மவர் கண்ணீர் காண்பாய் - 2
நலிந்த இயல்பு பாராய்
நாதன் உன் இயல்பில் சேராய் - 2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்