காணிக்கைப்பாடல் | 518-அன்புக்கு ஈடாகும் |
அன்புக்கு ஈடாகும் ஏழையின் காணிக்கை எதுவோ இங்கே பலர் வாழ பலியான தேவனுக்கு ஏற்றப் பொருள் எதுவோ பிறர்க்கென தம்மைத் தரும் இதயங்களே வளர்பிறை என எழும் மனிதர்களே நிஜமான காணிக்கை இதுதானே திருவடிதனில் ஆபேலின் காணிக்கை பெரிது அல்ல உயர்ந்திட்ட உள்ளம் தான் சிறப்பாகும் ஆயனின் காணிக்கை சிறிது அல்ல தாழ்ந்திட்ட சிறுமனமே இழிவாகும் விளைந்திட்ட நிறை பலனை எடுத்து வந்தோம் (இறைவா - 3) (2) தளர்ந்திட்ட வாழ்வினையே தழைத்தோங்க வரம் அருள்வாய் உடைந்திட்ட உறவுகளை உருப்பெறச் செய்ய உவப்புடனே தருகின்றோம் எம் சிறுவாழ்வை சாய்ந்திட்ட மனிதத்தை நிமிர்ந்திடச் செய்ய சரிநிகர் உலகிற்காய் எமைப் பயன்படுத்தும் காண்கின்ற சமுதாயம் வாழ்வை வழங்க (இறைவா - 3) (2) அர்ப்பணிக்கும் உள்ளமதை அன்போடு ஏற்றருள்வாய் |