காணிக்கைப்பாடல் | 516-அன்பின் பலியாய் |
அன்பின் பலியாய் ஏற்பாய் - உம்மை அணுகிடும் எளியவர் வேண்டுதல் கேட்பாய் அன்பின் பலியாய் ஏற்பாய் பண்படும் மனதின் துயர் தீர்ப்பாய் - 2 - எமை புண்ணிய வாழ்வில் நிலைபெறச் செய்வாய் வாழ்வின் கொடைகள் பெறுகின்றோம் அருள் வள்ளலுன் கருணையில் வாழ்கின்றோம் - 2 முழுமுதல் தலைவா இறைஞ்சுகின்றோம் - 2 - எமை திருப்பலிப் பொருளாய் தருகின்றோம் படைப்பின் மீதே பரிவிருக்க - அந்தப் பரிவால் உன் மகன் உயிர் கொடுக்க - 2 படைப்பே உம்மால் மகிழ்ந்திருக்க - 2 - உம்மில் படைத்தோம் தூய்மை நிறைந்திருக்க |