காணிக்கைப்பாடல் | 513-அள்ளித் தருகின்றேன் |
அள்ளித் தருகின்றேன் அனைத்தையும் தருகின்றேன் அர்ப்பணமாய் ஏற்றிடுவாய் அருள் பொழிந்து எனைக் காத்திடுவாய் (2) சிறிய இதயத்தை தருகின்றேன் - என் செல்வம் அனைத்தையும் தருகின்றேன் எளிய இதயத்தை தருகின்றேன் - யாம் பெற்றவை அனைத்தையும் தருகின்றேன் உடல் பொருள் ஆவியைத் தருகின்றேன் - 2 உளம் உவந்தே அனைத்தையும் தருகின்றேன் - 2 சொந்த பந்தத்தைத் தருகின்றேன் - என் சுகங்கள் அனைத்தையும் தருகின்றேன் ஆசைகள் அனைத்தையும் தருகின்றேன் - அதை அளவின்றி உமக்கே தருகின்றேன் மண் பொன் பொருளையும் தருகின்றேன் - 2 மனம் மகிழ்ந்தே அனைத்தையும் தருகின்றேன் - 2 |