காணிக்கைப்பாடல் | 512-அர்ப்பணித்தேன் என்னையே |
அர்ப்பணித்தேன் என்னையே யேசுவே உன் அன்புப்பலிப் பீடத்தில் தியாகமாகுவேன் உம் பாதையில் பயணமாகுவேன் உண்மைக்கான சாட்சியாய் வாழ்ந்திடுவேன் வாழ்ந்திடுவேன் நான் வாழ்ந்திடுவேன் உள்ளங்கள் உயிர்த்து எழ உம்மோடு பாடுபட என்னை எந்நாளும் அளிக்கின்றேன் இதய உணர்வுகள் இன்ப ராகங்கள் - 2 எல்லாம் உந்தன் பணிக்கு என அர்ப்பணிக்கின்றேன் வாழ்வுக்குப் போராடும் உள்ளங்களில் வளர்ந்தே வலுவூட்ட விழைகிறேன் வாழ்க்கைப் பலியில் என்னையே தந்து 2 தளர்ச்சி நீக்கி வளர்ச்சி காண வழியும் ஆகுவேன் |