காணிக்கைப்பாடல் | 510-அர்ப்பணம் தரவே |
அர்ப்பணம் தரவே உம்மிடம் வந்தேன் அடியேன் அளிக்கும் காணிக்கை ஏற்பாய் ஏற்பாய் இறைவா ஏற்பாயே - உம் அருளினால் என்னை நீ நிறைப்பாய் வேர்வைத் துளியினால் நீர் பாய்ச்சி - உம் அருளின் கொடையினால் பயிர் செய்தே பலனாகப் பெற்றிட்ட காய் கனியை - 2 அர்ப்பணம் அளித்தேன் ஏற்றிடுவாய் - 2 கருணை மழையினால் வளமாக்கி - என் கல்லான இதயத்தை மலரச் செய்தே வறியவர் வாழ்வினை சுவைத்திடவே - 2 பலியெனத் தந்தேன் ஏற்பாய் - 2 |