காணிக்கைப்பாடல் | 509-அர்ப்பணம் அர்ப்பணம் |
அர்ப்பணம் அர்ப்பணம் அர்ப்பணமே நிதமும் நிதமும் அர்ப்பணமே (2) இயேசுவே எம்மையே முழுதும் உமக்கே அர்ப்பணமே பணிவாழ்வுப் பயணத் தடைகளை பணிவோடு உன் பாதம் படைக்கின்றோம் (2) திக்கற்றோர் வாழ்வில் திசையாய் நின்றிட தினமும் தருகின்றோம் - எம்மை உமக்கே தருகின்றோம் உயர்வு தாழ்வு நீங்கிட உன்னத பணிக்காய்த் தருகின்றோம் (2) உமது வாழ்வில் சாட்சியாய் வாழ்ந்திட உவந்து தருகின்றோம் - எம்மை உமக்கே தருகின்றோம் இறைவார்த்தை சமூகம் படைத்திட இறைவா என்னையே தருகின்றேன் (2) நன்மைகள் செய்து நாளும் வாழ்ந்திட நானும் வருகின்றேன் - இன்று உம்மிலே இணைகின்றேன் |