காணிக்கைப்பாடல் | 408-அர்ப்பணப் பூவாய் |
அர்ப்பணப் பூவாய் நானும் வந்தேன் அர்ச்சனை ஏற்று அருள் புரிவாய் ஐயா அர்ப்பணப் பூவாய் நானும் வந்தேன் அர்ப்பணம் அளித்திடும் நேரமென்றால் - அது அனைத்தையும் தந்திடும் நேரமன்றோ ஆண்டவா உந்தன் அடிமையாய் - என்னை அளித்திடும் உன்னத நேரமன்றோ மண்ணக வாழ்வில் விண்ணகம் காண மனதில் உறுதியை ஏற்றுவிட்டேன் விண்ணக ஒளியில் என்னையும் அளித்திட உடல் பொருள் ஆவியை தந்துவிட்டேன் ஒன்றுமில்லாமல் நான் தனித்து வந்தேன் இன்று உறவுகள் உரிமைகள் சேரக்கண்டேன் நடுவிலே மறைந்திடும் நானில வாழ்விலே நாயகன் உன்னிலே உறவு கண்டேன் மண்ணக வாழ்வில் விண்ணகம் காண மனதில் உறுதியை ஏற்றுவிட்டேன் விண்ணக ஒளியில் என்னையும் அளித்திட உடல் பொருள் ஆவியை தந்துவிட்டேன் பிறந்தன் பயனை நான் அடைந்திடுவேன் எந்தன் இறப்பிலே உன்னை நான் கண்டிடுவேன் நிரந்தரமானதோர் அமைதியை நான் காண்பேன் நிம்மதி மலராய் நான் மலர்ந்தால் மண்ணக வாழ்வில் விண்ணகம் காண மனதில் உறுதியை ஏற்றுவிட்டேன் விண்ணக ஒளியில் என்னையும் அளித்திட உடல் பொருள் ஆவியை தந்துவிட்டேன் |