காணிக்கைப்பாடல் | 406-அணையாத சுடராய் |
அணையாத சுடராய் உனக்காக எரிய அழியாத அன்போடு வந்தேன் - ஒரு பலியாக நானாகிப் பணிவாழ்வு புரிய அகலாக என் நெஞ்சம் தந்தேன் - நான் அழகான இதயம் நீ தந்தது - அதில் வழிந்தோடும் மொழியும் உன் அன்பானது ஆ ஆ ஆ ஆ அன்பா உன் அன்பே என் வாழ்வாகிட - 2 - இனி எனதான எல்லாமே உன் சொந்தமே எழிலான உலகம் நீ படைத்தது - அதில் அசைந்தாடும் தென்றல் உன் புகழ் பாடுது ஆ ஆ ஆ ஆ தேவா உன் நிலையன்பு எனில் தங்கிட - 2 - இனி திசையெங்கும் உன் பாடல் நானாகுவேன் |