Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 காணிக்கைப்பாடல்  404-அகிலம் படைத்த ஆண்டவரே  
அகிலம் படைத்த ஆண்டவரே
அனைத்தையும் தருகின்றோம்
ஆற்றல் நிறைந்த அகிலவனே
அனைத்தையும் தருகின்றோம் -2
தருவோம் தருவோம் தந்துகொண்டிருப்போம்
இதயத்தின் துடிப்பு இருக்கும் வரை -2

குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்
விளைச்சலைத் தருகின்றோம்
பாலையைப் போன்ற எங்கள் மனதின்
வரட்சியைத் தருகின்றோம் -2
நிறைவாய் கொடுத்தால் நிறைவாய் கிடைக்கும்
என்பதை நம்புகின்றோம் -2

கதிரவன் ஒளிபோல் கடலின் வளம்போல்
நிறைகளைத் தருகின்றோம்
இருள்போல் எங்கள் இதயத்தில் இருக்கும்
குறைகளைத் தருகின்றோம் -2
நல்லது கொடுத்தால் நல்லது கிடைக்கும்
என்பதை நம்புகின்றோம் -2



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்