காணிக்கைப்பாடல்கள் | திருமலர் பாதம் பணிந்தேன் |
திருமலர் பாதம் பணிந்தேன் - என்னில் திருவருள் புரிந்திடும் பரம் பொருளே திருமலர் பாதம் பணிந்தேன் மறைதனைப் புவிதனில் பரப்பிடவே - என் திறன்களை உம்மிடம் அளிக்க வந்தேன் கரையினில் நீந்தி நான் வாழ்ந்திடவே திருவருள் புரிந்திடுமே - உந்தன் இறையருள் பொழிந்திடுமே பிறர் நலம் போற்றிடும் வாழ்வினிலே - உன் திருமுக தரிசனம் நான் காண்பேன் நிறைவளம் போற்றிடும் வானவர்கள் நிலம்தனில் வளர்த்திடுவேன் - உந்தன் அருள் தர வேண்டுகிறேன் |