திருப்பாடல்கள் | உன்னில் அடைக்கலம் தேடிவந்தேன் (தி.பா. 16) |
உன்னில் அடைக்கலம் தேடிவந்தேன் இறைவா என்னைக் காத்தருளும் - 2 ஆ...ஆ... ஆ...ஆ... என்னோடு வாழும் தலைவன் நீரே நிலையான செல்வமாய் உனை அடைந்தேன் - 2 தூயோர் அணியில் இன்பம் கொள்வேன் - ஆ...ஆ.... தூயோர் அணியில் இன்பம் கொள்வேன் அனுதினம் உன்னடி திரும்பிடுவேன் - நான் அனுதினம் உன்னடி திரும்பிடுவேன் - உன்னில் ஆ...ஆ... ஆ...ஆ... ஆண்டவர் நீரே என் உரிமைச் சொத்து அறிவுரை வழங்கும் உனைப் போற்றுவேன் - 2 உன் துணை இருப்பதாற் கலங்கமாட்டேன் - ஆ...ஆ... உன் துணை இருப்பதாற் கலங்கமாட்டேன் மகிழ்ச்சியின் துள்ளலில் புகழிசைப்பேன் - நான் மகிழ்ச்;சியின் துள்ளலில் புகழிசைப்பேன் - உன்னில் ஆ....ஆ.... ஆ....ஆ.... வாழ்வின் வழியை நான் அறியச்செய்வீர் நிறைவான மகிழ்வை உனில் காணுவேன் - 2 உன்னுடன் இருப்பதிற் பெருமை கொள்வேன் - ஆ... ஆ.. உன்னுடன் இருப்பதிற் பெருமை கொள்வேன் எப்போதும் மனதுக்குள் உனைத் தொழுவேன் - நான் எப்போதும் மனதுக்குள் உனைத் தொழுவேன் |