திருப்பாடல்கள் | உயிர் வாழ்வோர் நாட்டில் |
திபா 116: 10,15. 16-17. 18-19 (பல்லவி: 9) பல்லவி: உயிர் வாழ்வோர் நாட்டில் நான் ஆண்டவர் திருமுன் வாழ்ந்திடுவேன். மிகவும் துன்புறுகிறேன்! என்று சொன்னபோதும் நான் நம்பிக்கையோடு இருந்தேன். ஆண்டவர் தம் அன்பர்களின் சாவு அவரது பார்வையில் மிக மதிப்புக்குரியது. - பல்லவி ஆண்டவரே! நான் உண்மையாகவே உம் ஊழியன் நான் உம் பணியாள் உம் அடியாளின் மகன் என் கட்டுகளை நீர் அவிழ்த்து விட்டீர். நான் உமக்கு நன்றிப் பலி செலுத்துவேன் ஆண்டவராகிய உம் பெயரைத் தொழுவேன். - பல்லவி இப்பொழுதே உம் மக்கள் அனைவரின் முன்னிலையில் ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன் உமது இல்லத்தின் முற்றங்களில், எருசலேமின் நடுவில், ஆண்டவரே! உமக்கு என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன். - பல்லவி |