திருப்பாடல்கள் | உலகனைத்தையும் ஆளும் |
உலகனைத்தையும் ஆளும் உன்னதராம் ஆண்டவர் ஆட்சி செய்கின்றார். ஆண்டவர் ஆட்சி செய்கின்றார் பூவுலகம் மகிழ்வதாக! திரளான தீவு நாடுகள் களிகூர்வனவாக! மேகமும் காரிருளும் அவரைச் சூழ்ந்துள்ளன நீதியும் நேர்மையும் அவரது அரியணையின் அடித்தளம் ஆண்டவர் முன்னிலையில், அனைத்துலகின் தலைவர் முன்னிலையில், மலைகள் மெழுகென உருகுகின்றன வானங்கள் அவரது நீதியை அறிவிக்கின்றன அனைத்து மக்களினங்களும் அவரது மாட்சியைக் காண்கின்றன - ஏனெனில், ஆண்டவரே! உலகனைத்தையும் ஆளும் உன்னதர் நீர் தெய்வங்கள் அனைத்திற்கும் மேலானவர் நீரே! - பல்லவி |