திருப்பாடல்கள் | படைகளின் ஆண்டவரே - தி.பா. 84 |
படைகளின் ஆண்டவரே அனைத்துலகின் அரசரே உம் இல்லம் தங்குவோர் பேறுபெற்றோர் உம் புகழைப் பாடுவோர் பேறுபெற்றோர் அடைக்கலான் குருவிக்கும் சின்ன சிட்டு குருவிக்கும் உமது இல்லம் வீடானது உம் உறைவிடம் மேலானது இறைவா நான் உம்மை நாடி வந்தேன் உம் இல்லம் தேடி இறைவா நான்உம்மை நாடி வந்தேன் உம் இல்லம் தேடி என் உள்ளம் உன் இல்லம் ஆனதே எல்லாமே உன் சொந்தம் ஆனதே வலிமையும் கேடயம் கவசமும் நீரே என் ஆண்டவரே என் ஆற்றலாய் இருப்பவரே இறைவா உம் கரம் பற்றி நடந்தேன் உம் இல்லம் நோக்கி இறைவா உம் கரம் பற்றி நடந்தேன் உம் இல்லம் நோக்கி உம் இல்லம் வறியோரின் வாழிடம் மாந்தர் எல்லோரும் உன் சொந்தம் ஓரினம் |