Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

திருப்பாடல்கள் நான் புற்ப்பட்டு என் திருப்பாடல்: 51  

திருப்பாடல்: 51
நான் புறப்பட்டு என் தந்தையிடம் போவேன்

கடவுளே! உமது பேரன்புகேற்ப
எனக்கு இரங்கும்;
உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப
என் குற்றங்களைத் துடைத்தருளும்.
என் தீவினை முற்றிலும் நீங்கும்படி
என்னைக் கழுவியருளும்;
என் பாவம் அற்றுப்போகும்படி
என்னைத் தூய்மைப்படுத்தியருளும்;


கடவுளே! தூயதோர் உள்ளத்தை
என்னுள்ளே படைத்தருளும்;
உறுதிதரும் ஆவியை,
புதுப்பிக்கும் ஆவியை,
என்னுள்ளே உருவாக்கியருளும்.
உமது முன்னிலையிலிருந்து
என்னைத் தள்ளிவிடாதேயும்;
உமது தூய ஆவியை
என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.

என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்;
அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும்.
ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது;
நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.
கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே;
கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்