திருப்பாடல்கள் | கடவுளே தூயதோர் உள்ளத்தை |
கடவுளே தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும் என்னுள்ளே படைத்தருளும் கடவுளே உமது பேரன்பிற்கேற்ப எனக்கு இரங்கும் உமது அளவற்ற இரக்கத்திற்கு ஏற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும் என்தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும் என் பாவம் முற்றிலும் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும் கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும் உறுதிதரும் ஆவியை புதுப்பிக்கும் ஆவியை என்னுள்ளே உருவாக்கியருளும். உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும் உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும் தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன் பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். |