Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

திருப்பாடல்கள் கடவுளே மக்களினத்தார்

கடவுளே மக்களினத்தார் - உம்மைப்
புகழ்ந்து போற்றிவர் (2)

கடவுளே எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக
உம் திருமுக ஒளியை எம் மீது வீசுவீ-ராக
அப்பொழுது உலகம் உமது வழியை
அறிந்து கொள்ளும்
பிறஇனத்தார் அனைவரும் நீர் அருளும்
மீட்பை உணர்ந்து கொள்வர்

வேற்று நாட்டினர் அக்களித்து
மகிழ்ச்சியுடன் பாடிடுவராக (2) - ஏனெனில்
நீர் மக்களினங்களை நேர்மையுடன் ஆள்கின்றீர் (2)
உலகின் நாடுகளை வழி நடத்துகின்றீர்

கடவுளே மக்களினத்தார் - உம்மைப்
புகழ்வார்களாக
மக்கள் எல்லோரும் உம்மைப் போற்றுவார்களாக
கடவுளே நமக்கு ஆசி வழங்குவீராக
உலகின் கடையெல்லைவரை வாழ்வோர்
அவருக்கு அஞ்சுவாராக






 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்