திருப்பாடல்கள் | எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக |
எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக! எருசலேமே! ஆண்டவரைப் போற்றுவாயாக சீயோனே! உன் கடவுளைப் புகழ்வாயாக அவர் உன் வாயில்களின் தாழ்களை வலுப்படுத்துகின்றார் உன்னிடமுள்ள உன் பிள்ளைக்கு ஆசி வழங்குகின்றார் அவர் உன் எல்லைப் புறங்களில் அமைதி நிலவச் செய்கின்றார்; உயர்தரக் கோதுமை வழங்கி உன்னை நிறைவடையச் செய்கின்றார். அவர் தமது கட்டளையை உலகினுள் அனுப்புகின்றார் அவரது வாக்கு மிகவும் விரைவாய்ச் செல்கின்றது. யாக்கோபுக்குத் தமது வாக்கையும் இஸ்ரயேலுக்குத் தம் நியமங்களையும் நீதிநெறிகளையும் அறிவிக்கின்றார் அவர் வேறெந்த இனத்துக்கும் இப்படிச் செய்யவில்லை அவருடைய நீதிநெறிகள் அவர்களுக்குத் தெரியாது |