Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

திருப்பாடல்கள் இறைவனே என்னைக் காக்கின்றார்  


இறைவனே என்னைக் காக்கின்றார்
இனியொரு குறையும் எனக்கில்லை
நிறைவழி நோக்கி நடத்திடுவார்
நிம்மதியோடு நான் வாழ்வேன் (2)

பகலின் வெம்மையில் பயமில்லை
இருளின் நிலவிலும் தீமையில்லை (2)
நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்
உன் கால் இடற விடுவதில்லை
உன்னதர் என்றும் அயர்வதில்லை 2

இன்றும் என்றும் காப்பவராம்
பயணத்தில் துணையும் அவர் கரமாம் (2)
நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்
தீமையைக் கண்டு நான் அஞ்சேன்
நலமாய் நிதமும் நான் வாழ்வேன் - 2

உன்னதம் அமைதியில் மலரட்டுமே
உன்னெழில் நீதியில் ஒளிரட்டுமே (2)
நம் இறைவன் காக்கின்றார் என்றும் உதவிடுவார்
நன்மைகள் எங்கும் நிலவட்டுமே
இறைவனின் நிழலில் வாழட்டுமே - 2




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்