திருப்பாடல்கள் | என் தலைவர் என் வாழ்வுக்கு |
திபா 54: 1-2. 3. 4,6 (பல்லவி: 4b) பல்லவி: என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார். கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும் உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும். கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும் என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். -பல்லவி ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர் கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர் அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. -பல்லவி இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார் என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார் தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன் ஆண்டவரே உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று. -பல்லவி |