Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

திருப்பாடல்கள் என் இறைவனே என் தெய்வமே


என் இறைவனே என் தெய்வமே - உம்மை
எந்நாளும் போற்றிடுவேன் - உம்மை
எந்நாளும் பாடுவேன் (2)

கனிவான இறைவனே போற்றி
கருணை தெய்வமே போற்றி (2)
சினம் கொள்ளாதவர் நன்மை புரிபவர் (2) - உம்
பேரன்பை வாயாரப் பாடுவேன் (2)

வானம் பூமி உம்மை போற்றுமே
உயிர்கள் யாவும் நன்றி சொல்லுமே (2) பல
சந்ததிகள் உம்மை பாடுமே (2) - உம்
பேரன்பை வாயாரப் பாடுவேன்






 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்