Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

திருப்பாடல்கள் எக்காளம் முழங்கிடவே


எக்காளம் முழங்கிடவே உயர ஏறுகிறார் ஆண்டவர் (2)

மக்களினங்களே களிப்புடன் கைகொட்டுங்கள்
ஆர்ப்பரித்துக் கடவுளை புகழ்ந்து பாடுங்கள் (2)
ஏனெனில் உன்னதரான ஆண்டவர்
அஞ்சுதற்கு உரியவர் உலகு அனைத்தையும்
ஆளும் மாவேந்தர் (2) அவரே

ஆரவார ஒலியிடையே பவனியாக வருகிறார்
எக்காளம் முழங்க உயர ஏறுகிறார் ஆண்டவர் (2)
பாடுங்கள் கடவுளுக்குப் புகழ்பாடுங்கள் (2)
பாடுங்கள் அரசருக்கு (2) புகழ்பாடுங்கள்




 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்