திருப்பாடல்கள் | ஆண்டவர்க்கு அஞ்சுபவர் |
ஆண்டவர்க்கு அஞ்சுபவர் பேறு பெற்றோர் அவர் வழியில் நடந்திடுவோர் பேறுபெற்றோர் (2) ஆண்டவர்க்கு அஞ்சிடுவோர் பேறு பெற்றோர் அவர் வழியில் நடந்திடுவோர் ஆசி பெற்றோர் உமதுழைப்பின் பயனை நீர் நிறைவாய் உண்டிடுவீர் நற்பேறும் நலன்களுமே ஆண்டவர் உனக்கு வழங்கிடுவார் உம் இல்லத்தில் உம் துணைவி திராட்சைக் கொடிபோல உம் பிள்ளைகள் ஒலிவச் செடிபோல் உம்மைச் சூழ்ந்திருப்பர் ஆண்டவர் சீயோன் நின்று ஆசி வழங்கிடுவார் வாழ்நாளெல்லாம் எருசலேமின் நல்வாழ்வை காணசெய்திடுவார் |