திருப்பாடல்கள் | ஆண்டவரின் நியமங்கள் சரியானவை |
திருப்பாடல் 19 ஆண்டவரின் நியமங்கள் சரியானவை இதயத்தை மகிழ்விக்கின்றன 2 ஆண்டவரின் திருச்சட்டம் நிறைவானது அது புத்துயிர் அளிக்கின்றது ஆண்டவரின் ஒழுங்குமுறை நம்பத்தக்கது எளியவருக்கு ஞானம் அளிக்கின்றது ஆண்டவரை பற்றிய அச்சம் தூயது அது எந்நாளும் நிலைத்திருக்கும் ஆண்டவரின் நீதிநெறிகள் உண்மையானவை அவை முற்றிலும் நீதியானவை அவற்றால் அடியேன் நான் எச்சரிக்கப் படுகின்றேன் அவற்றை கடைபிடிப்போருக்கு மிகுந்த பரிசுண்டு தவறுகளை உணந்து கொள்பவர் யார்தான் என் அறியாப் பிழைக்காக என்னை மன்னியும் ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும் அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும் அப்பொழுது நான் மாசற்றிருப்பேன் பெரும் பிழை எதையும் செய்யாதிருப்பேன் |