திருப்பாடல்கள் | ஆண்டவரே உம் இரக்கத்தையும் |
ஆண்டவரே உம் இரக்கத்தையும் பேரன்பையும் நினைத்தருளும் பேரன்பையும் நினைத்தருளும் ஆண்டவரே உம் பாதைகளை நான் அறியச் செய்யும் உம் வழிகளை எனக்கு கற்பித்தருளும் உமது உண்மை நெறியில் என்னை நடத்தி எனக்கு கற்பித்தருளும் ஏனெனில் நீரே என் மீட்பராம் கடவுள் உம்மையே நான் நாள் முழுவதும் நம்பியிருக்கின்றேன் ஆண்டவரே உமது இரக்கத்தையும் உமது பேரன்பையும் நினைத்தருளும் ஏனெனில் அவை தொடக்கமுதல் உண்மை உள்ளவையே உமது பேரன்பிற்கேற்ப என்னை நினைத்தருளும் ஏனெனில் ஆண்டவரே நீரே நல்லவர் ஆண்டவர் நல்லவர் நேர்மையுள்ளவர் ஆகையால் அவர் பாவிகளுக்கு நல்வழியைக் கற்பிக்கின்றார் எளியோரை நேரிய வழியில் அவர் நடத்துகின்றார் எளியோர்க்கு தமது நேரிய வழியை கற்பிக்கின்றார் |