திருப்பாடல்கள் | ஆண்டவரே என் ஆயர் |
ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை ஆண்டவரே என் ஆயர் எனக்கேதும் குறையில்லை பசும்புல் வெளிமீது எனை அவர் இளைப்பாறச் செய்வார் அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார் அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார் தம் பெயர்க்கேற்ப எனை நீதிவழி நடத்திடுவார் மேலும் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நான் நடக்க நேர்ந்தாலும் நீர் என்னோடு இருப்பதால் எத்தீங்கிற்கும் அஞ்சிடேன் உம் கோலும் நெடுங்கழியும் என்னைத் தேற்றும் என்னுடைய எதிரிகளின் கண்முன்னே எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர் என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர் எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது |